பிராந்தியம்
மதீனா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் 2021/2022 பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக் காலம் முடிவடைந்துள்ள நிலையில் 2022/2023 ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இம்மாதம் எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது
மடவளை மதீனா தேசிய பாடசாலையின் 2022/2023 பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்பட்டன
விண்ணப்பதாரிகள் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் புதிதாக வரையப்பட்ட பழைய மாணவர் சங்க யாப்பையும் வாசித்து அறிந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.