crossorigin="anonymous">
உள்நாடுபொது

74 வயதிலும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதும் முதியவர்

நெலுவ – களுபோவிட்டியனை பிரதேசத்தை சேர்ந்த 74 வயது நிரம்பிய சந்திரதாச கொடகே எனும் நபர், நெலுவ தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகிறார்

74 வயது நிரம்பிய சந்திரதாச கொடகே க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாட பரீட்சைகளுக்கு ‍இம்முறை விண்ணப்பித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று (28) விஞ்ஞான பாட பரீட்சை தோற்றிய அவர் இன்று (30) கணித பாட பரீட்சைக்கும் தோற்றுகிறார்.

கடந்த வருட க.பொ.த சா.த பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் தோற்றி அந்த பாடத்தில் சாதாரண (S) சித்தி பெற்றிருந்தார்.

“1970 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக க பொ த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினேன். நான்கு திறமை சித்திகள் பெற்றிருந்தேன். ஆனால், அப்போதைய அரசியல் அழுத்தத்தால் பரீட்சையில் தேர்ச்சி பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை” என 74 வயது நிரம்பிய சந்திரதாச கருத்து வெளியிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − = 50

Back to top button
error: