crossorigin="anonymous">
உள்நாடுபொது

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட்19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பமானது

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட்19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (09) ஆரம்பமானது. மாவட்ட தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் இன்று காலை தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்துக்கென 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

ஏனைய 10 ஆயிரம் தடுப்பூசிகள் பொலிஸார், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கண்காணித்தார்.

பிரஜாசக்தியின் பணிப்பாளரும், கொவிட் தடுப்பூசி செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள், ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன்ர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 8

Back to top button
error: