crossorigin="anonymous">
வெளிநாடு

ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிகளின் மகள் கதீஜா மற்றும் ரியாஸ்தீன் திருமணம்

இந்தியாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிகளின் மகள் கதீஜா மற்றும் ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரின் திருமணம் இந்தியாவில் நேற்று (05) எளிய முறையில் நடைபெற்றுள்ளது

ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிகளின் மகளின் திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகள் கதீஜாவின் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் எல்லாம் வல்ல இறைவன் அவர்களை ஆசிர்வதிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்களோடு மறைந்த அவரது அம்மா கரீமா பேகத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

மகளின் திருமணத்திலும் தாயை நினைவுகூறும் ஏ.ஆர் ரஹ்மானின் செயலுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வரும் அதேவேளை அவரது மகள் திருமணத்திற்கு வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர்.

இந்தியாவில் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 36 − 33 =

Back to top button
error: