வெளிநாடு

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கனடாவில் வாகனத்தால் மோதி படுகொலை

கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான தாக்குதலாகும் இது  , முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி பால் வைட் தெரிவித்துள்ளார்.

74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: