crossorigin="anonymous">
ஆக்கங்கள்

காத்தான்குடியில் “வாரவலம்” பத்திரிகை அறிமுக விழா

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி காத்தான்குடி மண்ணிலிருந்து வாராந்தம் வெளிவரவிருக்கும் வாராந்த பத்திரிகையான “வாரவலம்” பத்திரிகையின் அறிமுக விழா காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி அவர்களது தலைமையில் இடம்பெற்ற பத்திரிகை அறிமுக விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது “வாரவலம்” பத்திரிகையின் முதற்பரதி அரசாங்க அதிபரிற்கு வழங்கி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆன்மீக அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு வழங்கி அறிமுகம் செய்துவைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு இராமகிருஷ்ன மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத்.சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் மற்றும் ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஜீ.ம்.அமீன் பலாஹி உள்ளிட்டோர் நிகழ்விற்கு அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 − 23 =

Back to top button
error: