crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின்கீழ் இணைப்புச் செய்யப்பட்ட 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடைபராமரிப்பு மற்றும் சிறுபொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்; மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (25) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்ட 287 பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19 பெரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும், கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 7 பேரும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26 பேரும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23 பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 15 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 21 பேரும், வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23 பேருமாக 281 பேர் நிரந்தர நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்நிலையத்திலேயே அவர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − 85 =

Back to top button
error: