crossorigin="anonymous">
வெளிநாடு

வட கொரியா மீண்டும் ஏவுகனை சோதனை

வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் ஏவுகனை

வடகொரியா மீண்டும் ஏவுகனை சோதனையை நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டச் செய்தியில், “ வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான டேக்டிகள் கைடட் ( tactical guided) என்ற ஏவுகணையை வடகொரியா  பரிசோதத்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வடகொரிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது, 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை நான்கு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இந்த நிலையில், வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகள் பற்றி பேசியிருந்தார். அப்போது அவர், “எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது ராணுவத்தை மேம்படுத்தக் காரணமாகிறது. தற்காப்புக்காகவே நாங்கள் ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம்.

வடகொரியா அதன் ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 53 = 55

Back to top button
error: