crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் களத்தில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் கொவிட்19 சூழ்நிலையின்போது மக்கள் மத்தியில் நேரடியாக களப் பணியாற்றுபவர்களுக்காக முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கிகள் அடங்கிய பொருட் தொகுதியொன்றினை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரனிடம் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக பணியினை முன்னெடுத்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான யூமெடிக்கா நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த நிறுனத்தின் உத்தியோகத்தர்களினால் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டன

கொரோனா தொற்றின் காரணமாக தொடர்ச்சியான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேவைகள் நிமித்தம் நேரடியாக களத்தில் பொதுமக்களுடன் தொடர்புடன் பணியாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு வழங்குவதற்கான முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கிகளே இதன்போது கையளிக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந் அவர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − 61 =

Back to top button
error: