crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் தங்கியிருக்கும் அனைவரும் பொலிஸில் பதிவு

கொழும்பு மாநகர சபை எல்லை பிரிவில் தற்காலிகமாக அல்லது தொழில் நிமித்தம் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் அனைவரும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது அத்தியாயத்துக்கு அமைய பொலிஸில் உடன் பதிவு செய்யும் திட்டமொன்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பிரஜைகள் பொலிஸ் பிரிவூடாக பதிவு செய்யும் திட்டம் ‘தேசிய பாதுகாப்பை உறுதி செய்வோம்; குற்றம், போதைப் பொருளை ஒழிப்போம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பதிவு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது அத்தியாயத்துக்கு அமைய விண்ணப்பம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று முதல் வழங்கப்பட்டு வரும் அதனை இன்று சனிக்கிழமை (15) அல்லது நாளை ஞாயிற்றுக்கிழமையில் பெற்று பூர்த்தி செய்து பொலிஸாருக்கு வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

“தற்காலிக வதிவாளர்களை பதியும் திட்டம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதை நோக்ககாக கொண்டது. நேற்று (14) முதல் மூன்று நாட்களுக்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீதிகள் ஊடாக பொலிஸ் பிரஜைகள் பிரிவின் அதிகாரிகள் வருவார்கள். அவர்களின் கைகளில் தற்காலிக வதிவாளர்களை பதிவு செய்யும் விண்ணப்பம் இருக்கும்.

அவற்றை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும். அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இதற்கென விஷேட கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ஒரு விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க முடியும்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 + = 87

Back to top button
error: