வெளிநாடு

அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் மனிதனுக்கு

அமெரிக்காவை சேர்ந்தவர் 57 வயது டேவிட் பென்னட் இருதய மாற்று சிகிச்சை

அமெரிக்காவில் – மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட புதிய மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் (57). தீவிர இதய பாதிப்பால் பாதிக்கப்பட்ட பென்னட்டின் உடல் மனிதனின் இதயத்தை மாற்று இதயமாக பெற ஒத்துழைக்கவில்லை. அவரது மோசமான உடல் நிலை காரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். பன்றியின் இதயமும், மனிதனின் இதயமும் ஏறக்குறைய ஒத்த தோற்றத்தை கொண்டவை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடைசி வாய்ப்பு: ”நான் இந்த மாற்று அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இறக்க வேண்டும். இவை மட்டுமே எனக்கு முன் இருந்த வாய்ப்புகள். இதுதான் எனது கடைசி வாய்ப்பு” என்று சிகிசைக்கு பென்னட் சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பென்னட்க்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மருத்துவர்களால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. பென்னட் உயிர் வாழ எத்தனை ஆண்டுகள் இந்த மாற்று இதயம் உதவும் என்று தெரியாது. ஆனால். மாற்று அறுவை சிகிச்சையில் இது ஒரு பெரும் சாதனையாக கருதப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று உறுப்பு தட்டுப்பாடுகள் குறையும்: பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது குறித்து புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி கிரிஃபித் கூறும்போது, “அமெரிக்காவில் மாற்று உறுப்பு இல்லாமல் தினசரி 17 பேர் இறக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்காக காத்திருக்கிறார்கள். எனவே, இந்த அறுவை சிகிச்சை மூலம் உலகளவில் நிலவும் மாற்று உறுப்பு தட்டுப்பாடுகள் குறைவதற்கான பாதையில் நாம் ஒருபடி முன்னெடுத்து வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அக்டோபர் 2021-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் பன்றியின் சிறுநீரகம், மூளை செயலிழந்த மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரது உடல் நிலையை 2 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் பன்றியின் இதயம் மனிதருக்கு எந்தத் தடையுமின்றி நல்ல முறையில் செயல்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Back to top button
error: