crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பாலையூற்று பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும்போது குழப்ப நிலை

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை – பாலையூற்று லொக்டவுன் செய்யப்பட்ட கோயிலடி பிரதேசத்தில் உலர் உணவு பொருட்கள் வழங்கும்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் லொக் டவுன் செய்யப்பட்டிருந்ததுடன் இந்நிலையில் அரசாங்கத்தினல் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கிராம உத்தியோகத்தர் தலைமையில் இங்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அனைவருக்கும் உலர் உணவுப் பொருட்களளை வழங்காமல் கடமையில் இருந்த அரச ஊழியர்கள் தாம் விரும்பியவர்களுக்கு மாத்திரம் வழங்கியதாகவும், அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் எனவும் இங்கு வருகை தந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இதேவேளை உலர் உணவுப் பொருட்கள் வழங்கும்போது இரு குழுக்களுக்கிடையே மோதல் நிலை ஏற்பட்டிருந்ததுடன், இதன்போது அவ்விடத்துக்கு பொலிசார் வருகை தந்து குழப்ப நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தற்பொழுது முகக் கவசம் கட்டாயப் படுத்தப் பட்டிருக்கின்றன நிலையில் அரச ஊழியர்கள் அவ்விடயங்களை கருத்திற் கொள்ளாமல் பொது மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதேவேளை சமூக இடைவெளிகளை பேனாமல், முகக் கவசங்கள் அணியாமல் மக்கள் வருகை தரும் சந்தர்ப்பங்களில் இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகள் விழிப்பாக செயற்பட வேண்டும் எனவும், இன்று இடம்பெற்றதைப்போன்று தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட கூடாது எனவும் பிரதேச புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: