crossorigin="anonymous">
உள்நாடுபொது

கிறிஸ்மஸ் பண்டிகை நள்ளிரவு ஆராதனை

இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் (25) நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பாலன் பிறப்பினை குறிக்கும் வகையில் தேவபெண்களினால் பாலகன் கொண்டுவரப்பட்டு ஆயரிடம் வழங்கி அதனை தொழுவத்தில் வைத்து பாலன் பிறப்பு நினைவுகூரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வழிபாடுகள் ஆயரினால் முன்னெடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு அருள்ஆசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதன்போது கிறிஸ்மஸ் பண்டிகைக்கான விசேட திருப்பலியானது சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியவாறாக ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் நாட்டிலிருந்து கொரோனா நிலை நீங்கவேண்டுமெனவும், நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலைக்கவும் பிரார்த்திக்கப்பட்டதுடன், கரோல் கீதமும் இசைக்கப்பட்டது.

அதேவேளை மாவட்டத்திலுள்ள ஏனைய தேவாலயங்களிலும் விசேட நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 3

Back to top button
error: