உள்நாடுபிராந்தியம்
மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா – 2021

கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா – 2021 கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (22) வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.
“அமைதியான, ஒழுக்கமான, முழுமையான சிறந்த மனிதர்களை கொண்ட புனித தேசத்தினை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகௌரி தினேஸ் தலைமையில இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இதன்போது பிரதேச மட்ட இலக்கிய போட்டியில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு இடம்பெற்றதுடன், “புதிய மழை” எழுத்தாளர் கௌரவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.