crossorigin="anonymous">
உள்நாடுபொது

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள், இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டுத்துறைக்குப் பிரவேசித்தவராவார்.

விக்கும் அதுல களுஆரச்சி அவர்களின் 33 வருடகால சேவையில் 27 வருடங்களாக நீதவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். அவர், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட நீதிபதியாகவும் கடமையாற்றியவராவார்.

சத்தியப்பிரமாண நிகழ்வில், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − = 20

Back to top button
error: