crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஹொரவ்பொத்தான பிரதேச சபையில் நேற்று நடந்தது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது சபையின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே. நேற்று (31) காலை பதற்ற நிலை ஏற்பட்டது.

பிரதேச சபையின் தலைவர் சாருக உதயங்க விஜேரத்ன எதிர்க்கட்சியின் மூன்று உறுப்பினர்களால் தாக்கப்பட்டதால் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் அவர் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹொரவ்பொத்தான பிரதேசத்திலுள்ள கொரோனா நிலைமை உள்ளிட்ட ஐந்து அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களை நிறைவேற்றிய பின்னர் கருத்துக்களை வெளிப்படுத்தியபோது எழுந்த கருத்து முரண்பாடு காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட இரண்டு உறுப்பினகள் அவரைத் தாக்கியதாக பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஹொரவ்பொத்தான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பிரதேச சபையின் தலைவரை தாக்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவரையும் இரண்டு உறுப்பினர்களையும் இன்றைய தினம் (01) கெபிதிகொள்ளாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது கெப்பித்திகொள்ளாவ நீதவான் நீதிமன்ற நீதிபதி மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் விடுதலை செய்து, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

சம்பவத்துடன் தொடர்பான CCTV காணொளி:

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 − = 70

Back to top button
error: