crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி

கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அரச கடமைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒழுங்கு முறையிலான கிராம உத்தியோகத்தர்ககளை வழங்கும் நோக்கமாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று (16) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

பயிற்சிநெறியின் வளவாளர்களாகசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.உஜித் நயனபிரிய லியனகே மற்றும் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் திரு.பி.எம்.சி.ஜே.பி.பலிகேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வினை ஆரம்பித்து வைத்து தலைமை உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள்

“பிரதேச மட்டத்தில் பல வெளிக்கள உத்தியோகத்தர்கள் கடமையாற்றினாலும் கிராம த்தின் அனைத்து விடயங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மிக முக்கியமான பொறுப்புவாய்ந்த பணி கிராம அலுவலர்களிடத்தே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடமைகளின் முக்கியத்துவம் கருதியும் பொதுமக்களுக்கான அர்ப்பணிப்பான சேவை கிடைப்பதனை உறுதிப்படுத்தியும் சிறப்பான மக்கள் சேவையை மேற்கொள்ள வேண்டும் .தமக்கென கொடுக்கப்பட்ட இவ் உன்னத பணியை சிறப்பாக மேற்கொண்டு சேவை நாடி வரும் பொதுமக்கள் திருப்தி அடையத்தக்கவகையில் கிராம உத்தியோகத்தர்கள் தமது பணியை முன்னெடுத்துச் செயற்படவேண்டும் ” எனத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 56

Back to top button
error: