வெளிநாடு

இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இந்தியா – டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தயிாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை இன்று 5 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.

இந்தியாவில் நேற்று மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் நேற்று வரை ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக இருந்தது.

இந்நிலையில், தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Back to top button
error: