crossorigin="anonymous">
வெளிநாடு

38 நாடுகளில் கொரோனா வைரஸ் திரிபு ஒமைக்ரான் வைரஸ் பரவல்

தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் 38 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

“இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் 38 நாடுகளில் இதுவரை பரவிவிட்டதாக உலக சுகாதாரஅமைப்புத் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா எதிர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில் “ ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 38 நாடுகளுக்கும், 6 மண்டலங்களுக்கும் பரவிவிட்டது..

தென் ஆப்பிரி்க்காவில் இப்போதுதான் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ய்ப்புள்ளது இருப்பினும் இன்னும் டெல்டா வகை வைரஸ்தான் வீரியம் மிகுந்ததாக இருக்கிறது. சார்ஸ்கோவிட்டை விட ஒமைக்ரான் வைரஸ் வித்தியாசமானது வேறுபட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அடுத்த இரு வாரங்களில் ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒமைக்ரான் பரவல், தீவிரத்தன்மை, நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பித்தல்,தடுப்பு நடவடிக்கைகள், கிளினிக்கல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தொடக்க நிலை ஆய்வுகளின் முடிவுகளைப் பொறுத்தவரை ஒமைக்ரான் பரவல் வேகமாக இருக்கும், தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதால்தான் தொற்று அதிகரிக்கிறது” இவ்வாறு மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 65 = 70

Back to top button
error: