crossorigin="anonymous">
வெளிநாடு

கொரோனா ஒமைக்ரான் வைரஸ் திரிபு அமெரிக்காவிலும் புகுந்தது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் குறித்தும், அதன் பரவல் பாதிப்பு குறித்தும் தொடர்்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டவுடன் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. ஆனால், தற்போது அமெரி்க்காவிலும் ஒமைக்ரான் புகுந்துவிட்டது.

அமெரிக்காவில் டெல்டா வைரஸின் பாதிப்பே இன்னும் முழுமையாகச் சரியாகாத நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் அந்தோனி பாஸி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த நபர் கடந்த மாதம் 22ம் தேதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து கலிபோர்னியாவுக்கு வந்தார். அவருக்கு ஒரு வாரத்துக்குப்பின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோனையில் கடந்த 29-ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 70 = 74

Back to top button
error: