crossorigin="anonymous">
உள்நாடுபொது

தீப்பற்றிய எம்.வீ.எக்ஸ்பிரிஸ் பர்ல் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் மாசை ஆராய நிபுணர்கள் குழு

இலங்கை கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட எம்.வீ.எக்ஸ்பிரிஸ் பர்ல் (MV X-PRESS PEARL) கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய சமுத்திரவியல் தொடர்பான நிபுணர்களும், பல்கலைக்கழக கலாநிதிகளும் இந்தக் குழுவில் நியமிக்கப்படவிருக்கின்றனர்.

கடல் வாழ் உயிரினங்கள் உட்பட கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும்.

இதேவேளை, ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மாசைக் கணிப்பிட்டு நஷ்டஈடு பெறுவதற்கான சிபார்சையும் இந்தக் குழு முன்வைக்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 + = 38

Back to top button
error: