crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக ஒரு நாள் சேவையை, பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும், காலி – தென் மாகாண காரியாலயத்திலும் பொதுமக்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள், தமது விண்ணப்பப் படிவத்தை தமது கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை தொடர்பான பிரிவில் ஒப்படைத்து, அதற்கான திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 − 76 =

Back to top button
error: