crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி போகம்பறை பள்ளிவாயலில் மீலாதுன் நபி தின வைபவம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கண்டி மத்திய சந்தை மீலாத் செரீப் சங்கம் 75 வது வருடமாக ஒழுங்கு செய்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தின வைபவம் கண்டி போகம்பறை பள்ளிவாயலில் (லைன் பள்ளியில்) இன்று (19) இடம் பெற்றது

விசேட பேச்சாளர்களாக சர்வமதங்களையும் சேர்ந்த மத குருக்களான வண. ஶ்ரீ வல்தெனிய வஜிர ரதன தேரர், தம்மதிஸ்ஸ தேரர், வண. பிதா செல்டன் டேனியல், மஹய்யாவ கோவில் குருக்கலான ஶ்ரீராம் குருக்கல், மௌலவிகளான எச்.எம்.ரிஸ்வான் பஸ்லுல் றஹ்மாக், மொகமட் ராபி உற்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிதிகளாக கண்டி பிராந்தி சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர், கண்டி தலைமையக பொலீஸ் பரிசோதகர் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கான அனுசரணையை கண்டி மஸ்ஜித்களின் சம்மேளனம், கண்டி நகர வர்தகர்கள் சங்கம், கண்டி உலமா சபை என்பன இணைந்து வழங்கி இருந்தன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 21 = 27

Back to top button
error: