crossorigin="anonymous">
உள்நாடுபொது

அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் இடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

கொவிட் தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்க உள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளின் புகழ்பெற்ற புனித சுற்றுலாத்தலங்களான பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்டit மத்திய கலாச்சார நிதியத்தினால் பராமரிக்கப்படுகின்றன நாட்டிலுள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களையும் சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப திறக்கப்படும்.

உலக உலக மரபுரிமை வலயமான காலி கோட்டையில் அமைந்துள்ள இலங்கையின் ஒரேயொரு கடல்சார் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி இப்பன்கடுவ கல்லறை அருங்காட்சியகம் ,தம்புள்ளை புதைபடிவ பாதுகாப்பு மையம், அபயகிரிய சீகிரயா, கண்டி, பொலeறுவ, கதிர்காமம், யாப்பஹுவ, இரத்தினபுரி, மொனராகல, நாமல் உயண, திருகோணமலை, தம்பதெனிய, ரிதீ விகாரை, யாழ்ப்பாணம், ரம்பா விகாரை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படும் எனக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், பேராசிரியர் காமினி ரணசிங்க அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: