crossorigin="anonymous">
ஆக்கங்கள்

சீ்ன ஆதிக்கமும்  காலி பள்ளிவாசலும்

கி.பி 1400 காலப்பகுதியில் சீனாவின் ஆட்சி மிங் என்ற அரசர்களின் கட்டுப்பாட்டில் இந்தது. அவர்களின் அரச சபையில் மதிப்பும் கௌரவமும் மிக்க முஸ்லிம் இருந்தார் அவரது பெயர் Zheng He அவர் செங் ஹ அல்லது செங் ஹே என்று அழைக்கப்பட்டார்.

Zheng He சீன அரசாங்கத்தின் தலைமை இராஜதந்திரியாகவும், சூபியாகவும், கடற்படைத்தளபதியாகவும் இருந்தார். சீன பிராந்திய முஸ்லிம்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அரபு உலகுக்கும் சீனாவுக்கும் இடையிலான Ambassador ஆகவும் நியமிக்கப்பட்டருந்தார்.
அவர் முதல் தடவையாக 1404ம் ஆண்டு இலங்கை வந்தார். அன்று முதல் 1433ம் ஆண்டு காலம் வரை செங் ஹ 06 தடவைகள் இலங்கை வந்திருக்கிறார்.

செங் ஹா ஹஜ் பயணிகளை அழைத்து வந்தபோது இன்று இலங்கையின் தென் பகுதி தலைநகரான காலியில் நகரத்தில் உள்ள ஹஜ்ஜு வத்த அல்லது கச்சுவத்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டிருந்தார். செங் ஹே உட்பட சீன ஹஜ் பயணிகள் கச்சுவத்த பள்ளிவாசலுக்கு விஜயம செய்தமைக்கான “கல்வெட்டுக்கள்” அங்கு இருந்ததாகவும் அவை பிற்காலத்தில் மாயமானதையும் நாம் கவலையோடு ஞாபகப்படுத்துவது அவசியம்.

இலங்கையில் அன்றைய காலத்தில் கி.பி 1410 காலத்தில் வீரஅழகேஸ்வர என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவன் அரேபிய சீன கடல் வர்த்தகர்கள் மீது தொடர்ச்சியாக
அநீதியிழைத்துவந்தான். இதனால் கோபமடைந்த செங் ஹ 1411ல் இங்கை வந்து வீர அழகேஸ்வரனை தனது காலடியில் மண்டியிடச் செய்தார். அவனை சீனாவுக்கு இழுத்துச் சென்றார்.

இதில் இணைக்கப்பட்டுள்ள முதலாவது படம் செங் ஹ வினால் அழகேஸ்வர மன்னன் கைது செய்யப்பட்ட காட்சியை சித்திரிக்கிறது.

கி.பி 1505ல் போர்த்துக்கேயத் தளபதி லோறன் சோ தி அல்மய்தா இலங்கையை கைப்பற்ற கொழும்பு வந்தபோது அவரது கப்பல் படையில் ஆயிரம் வீரர்களே இருந்தார்கள். மூன்று அல்லது நான்கு கப்பல்களே அவரிடம் இருந்தன.

ஆனால் செங் ஹ இந்த சம்பவம் இடம் பெறுவதற்கு சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்தார். அவரது படையில் 317 கப்பல்கள் இருந்தன. 27,000 வீரர்கள் இலங்கை வந்தார்கள். லோறன் சோ தி அல்மய்தாவின் கப்பல்களை விட ஐம்பது மடங்கு பெரிய கப்பல்களாக அவை இருந்தன.

செங் ஹா நினைத்திருந்தால் போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவினால் இலங்கையை ஆக்கிரமித்திருக்க முடியும். அவர் இலங்கையையும் இலங்கை மக்களையும் நேசர்களாகவே கருதிவந்தார்.

இன்று சீனாவின் ஆதிக்கம் உலகளாவிய ரீதியில் அவர்களை ஜாம்பவானாக மாற்றியுள்ளது. விரும்பியோ விரும்பமலோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மஹதீர் முஹம்மத் மற்றும் லீ சீ லூங் போன்ற ஆளுமைகள் கூறுவதைப் போல “அவர்களை எதிர்க்க எம்மைப் போன்ற சிறிய நாடுகளால் முடியாது ஆனால் நாம் சீன ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தவது அல்லது முகாமைத்துவம் செய்வது அவசியமாகும்”

(முதலாவது படம் செங் ஹ வினால் அழகேஸ்வர மன்னன் கைது செய்யப்பட்ட காட்சி இரண்டாவது படம் காலி கச்சுவத்தை பள்ளிவாசல்)

-பஸ்ஹான் நவாஸ்-

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 57

Back to top button
error: