crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கு அவசியமான புதிய கல்விக் கொள்கை – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

இலங்கை நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் (10) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது பாரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் பணியிடத் தெரிவு தொடர்பான வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றார். கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க மொழிகள் வீழ்ச்சியுறும் நிலைக்குச் சென்றிருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயகார சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்துத் தெரிவித்தார். அத்துடன், தற்பொழுது ஆங்கிலம் கல்வி மொழியாகிவருவது தொடர்பிலும் அவர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இலங்கை சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை 02 வாரங்களுக்குள் உபகுழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. சட்டத்தை தனியானதொரு பாடமாக அல்லாது குடியியல் கல்வியில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலும் அதில் விடயங்கள் உள்ளடக்கப்படுவது முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்தார். சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் காணப்படும் உறவு இதில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: