crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 157 மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 157 மரணங்கள் நேற்று (10) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (11) அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 10,995 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 157 கொரோனா வைரஸ் தொற்று மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 11,152 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மரணமடைந்த 157 பேரில், 70 பேர் ஆண்கள், 87 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 130 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 77 = 84

Back to top button
error: