உள்நாடுபொது

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இந்த விமான சேவை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டீ கோல் விமானநிலையம் வரை நேரடி சேவையாக ஆரம்பிக்கவுள்ளது.

புதன் ,வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. சேவையில் ஈடுபடவுள்ள A330-300 aircraft என்ற விமானத்தில் 297 பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: