உள்நாடுபொது

வெளிநாட்டுசசுற்றுலா பயணிகள் தொடர்பில் விதிக்கப்பட்ட விதிகள் தளர்வு

இலங்கையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் விதிக்கப்பட்ட விதிகளை தளர்த்தி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த வாரம் மாகாண மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2 டேஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட மற்றும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த சுற்றுலாப் பயணிகள், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக சுற்றுலா தளங்களை பார்வையிட பயணிக்கலாம்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேலையிலும் இந்த விதிமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு பயணிக்க அனுமதி உண்டு என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜயசிங்க தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: