crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவசரகால சட்ட ஒழுங்கு விதி 81 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பிலான அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் (The Proclamation relating to the Emergency Regulations) தொடர்பான பிரகடனம் 81 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (06) நிறைவேற்றப்பட்டது.

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளுக்கு ஆதரவாக 132 வாக்குகள் வழங்கப்பட்டதுடன், எதிராக 51 வாக்குகள் வழங்கப்பட்டன.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 67 = 72

Back to top button
error: