உள்நாடுபொது

ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸிற்கு மட்டு. ஊடக அமையத்தில் அஞ்சலி

கோவிட் தொற்றுக் காரணமாக அண்மையில் இறந்த ஊடகவியலாளர் அமரர். ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (06) மட்டக்களப்பு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: