crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களில் ஆலய திருவிழாக்கள் நடத்த தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பிரதேச மக்களுக்கான கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான விசேட அறிவித்தலை (12) விடுத்துள்ளார்கள்.

மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களில் கொவிட் நோயாளர்களின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றமையினால் பல இந்து ஆலயங்களிலிருந்து விசேட திருவிழாக்கள் மற்றும் பொங்கல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரப்படுவதாலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி க.சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

பிரதேசத்திற்கு உட்பட்ட சகல வழிபாட்டு தலங்களிலும் வழமையான ஆதாரதனைகளை பத்து அல்லது அதற்கு குறைந்தோரின் பங்குபற்றுதலுடன் நடத்த முடியும் என்றும், விசேட ஆராதனைகள் பொங்கல் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் என்பற்றை தற்கால கொவிட் நிலமையினை தடுக்கு முகமாக நிறுத்த வேண்டும்.

வழிபாட்டு தலங்களிலும் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் வழிபாட்டில் ஈடுடல் அல்லது வழிபாட்டு தலங்களில் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்றவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராம சேவகர் ஊடாக இந்த அறிவிப்பு வழிபாட்டு தலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − = 30

Back to top button
error: