crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கடந்த 10 நாட்களில் கொவிட்19 வைரசு தொற்று 591 உயிரிழப்பு

இலங்கையில் கடந்த 10 நாட்களில் கொவிட்19 வைரசுடன் தொடர்புபட்ட சுமார் 591 உயிரிழப்பு இடம்பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று  (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு கீழ்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர். சிறுவர்களுக்கு பைஸர் – BioNTech தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் இறுதி முடிவு தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவால் எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி வரை நாட்டில் 21 344 கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டனர். இக்காலப்பகுதியில் 134 179 பிசிஆர் பரியோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அமைச்சர் கூறினார்.

ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட 19688 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதோடுஇ 10 தொடக்கம் 18 வரையான சிறுவர்களில் 26143 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்களாக கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 9000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மாதத்திற்குள் 30 வயதிற்கும் மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் 30 வயதிற்கும் மேற்பட்ட 86 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களும் 18 சதவீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதத்திற்குள் 30 வயதிற்கும் மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுக்கு அருகில் உள்ளோரை இனங்கண்டு, அவர்களை விரைவில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 − 69 =

Back to top button
error: