உள்நாடுபொது

2021 வாக்காளர் இடாப்பு வாக்காளர் பெயர் பதிவு ஒன்லைன் ஊடாக

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் வாக்காளர்கள் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் http://www.elections.gov.lk என்ற இணைய தளத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், தகுதியான இலங்கை பிரஜைகள் வாக்காளர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

வாக்காளர பட்டியலில், பெயர் பதிவுகளில் உள்ள குறைபாடுகள் அல்லது அச்சுப் பிழைகளை திருத்தல். 2020 ஆம் ஆண்டு தேர்தல் பட்டியலில் பதிவு செய்யாத வாக்காளர்களை பதிவு செய்தல் போன்றவற்றை இதன் கீழ் மேற்கொள்ள முடியும்

eservicesShelection.gov.lk என்ற மின் அஞ்சல் முகவரி ஊடாக இது தொடர்பான பிரச்சினைகளை முன்வைக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: