crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை பார்வையிட்டார்

கொழும்பு விஹாரமகாதேவி திறந்தவெளி கலையரங்க வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நேற்று (02) இரவு பார்வையிட்டார்.

இராணுவத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் இந்த மத்திய நிலையம், 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்பதுடன், நேற்றைய தினம் பெருமளவானோர் அஸ்ட்ரா செனெக்கா இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், விவரங்களைக் கேட்டறிந்தார்.

இரண்டு நாட்களில் 244,251 பேர், அஸ்ட்ரா செனெக்கா இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கேகாலை மாவட்ட மக்களுக்கான முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும், நேற்று (02) ஆரம்பமாகின. தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் உள்ள சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு, ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர், கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 − 14 =

Back to top button
error: