crossorigin="anonymous">
உள்நாடுபொது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 53,030 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 94 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியதாக 53,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேல் மாகாணத்தில் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 வீதி சோதனைகளில் நேற்று 8,849 பேர் பரிசோதனை செய்யப்பட்டதுடன் மற்றும் 4,433 வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி 65 வாகனங்களில் வந்த 139 பேர் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக பேச்சாளர் கூறினார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசததை அணிந்திருக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் அல்லது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் மாகாண எல்லைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கையின் போது கோரப்படும் தேசிய அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை தயக்கமின்றி சமர்ப்பிக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 30 = 32

Back to top button
error: