crossorigin="anonymous">
உள்நாடுபொது

14 ஆசிரிய தொழிற்சங்கம் இணையவழி கற்பித்தலிலிருந்து விலகல்

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் நேற்று முதல் இன்றும் (13) இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − = 88

Back to top button
error: