crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீதிமன்றங்களின் கட்டட தொகுதிகளுக்குள் தேவையின்றி அதிகளவிலான பொதுமக்கள் கூட்டமாக நிற்பதற்கோ அல்லது உள் நுழையவோ அனுமதி இல்லை எனவும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணியுமான பீ. பிறேம்நாத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில், நேற்றைய தினம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் குறித்த நீதிமன்றங்களை நடாத்துவதற்கு சில நிபர்ந்தனைகளினூடான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம், ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகளுக்காக பொதுமக்கள் உள்ளெடுக்கப்படும்போது எவ்வாறான நடைமுறைகள் பின்பெற்றப்பட வேண்டும் என குறிப்பிடும் கடமை மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உள்ளதாகவும்,

குறித்த நீதிமன்றங்களின் உள் வீதிகளிலோ அல்லது நீதிமன்றங்களின் கட்டடங்களினுள்ளோ எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவ்வாறு நீதிமன்ற கட்டடங்களினுள் அனுமதிக்கப்பட வேண்டுமாயின் விளக்க வழக்குகளுக்கான எதிரிகள் அல்லது சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகள் தங்களுடைய சட்டத்தரணிகள் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டு உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன், அழைக்கப்படும் வழக்குகளுக்கு உரியவர்கள் நீதிமன்றத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் அவ்வாறு வருபவர்கள் அவர்களின் வழக்குகளுக்காக சட்டத்தரணியிடம் தொலைபேசி மூலம் அறியப்படுத்தி சட்டத்தரணிகளால் வர சொல்லப்பட்டால் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,

மேலும், தாபரிப்பு வழக்குகள், அவசரமாக கூட்டப்பட வேண்டிய வழக்குகள் பிணை வழக்குகள், குடும்ப வன்முறைகள் சம்பந்தமான வழக்குகள் ஆகியன வழமையான முறைகளில் நடைபெறும் என்றும் எனினும் குறித்த சகல வழக்குகளுக்கு வருகின்றவர்களும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பெற்றப்பட வேண்டும் என்றும்,

சட்டத்தரணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமாக அறிந்து வருவதற்கு சொல்லப்பட்டால் மாத்திரமே வர வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடி இருப்பதற்கோ, அதிகளவானவர்கள் கூடி நிற்பதற்கோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய முக்கிய சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீதவான் நீதிமன்றங்களில் விளக்க வழக்குகள் அழைக்கப்படும்போது தற்போது நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை காரணமாக வெளி மாகாணங்களில் இருந்து வர முடியாதவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மாட்டாது எனவும், ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து வழக்குகளுக்கு வராதவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 − 55 =

Back to top button
error: