crossorigin="anonymous">
உள்நாடுபொது

இராணுவத்திடமிருந்து தன்னியக்க கிருமித் தொற்று நீக்கி இயந்திரம்

இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு உற்பத்தி செய்துள்ள, இரு கைகளையும் கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம்,இன்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்த இயந்திரத்தில், நான்கு லீற்றர் திரவத் தொற்று நீக்கியைக் களஞ்சியப்படுத்தி, 600 பேர்களின் இரு கைகளையும் கிருமித் தொற்று நீக்க முடியும்.

இது, 48 மணித்தியாலம் தானாகச் செயற்படக்கூடிய இயலுமையைக் கொண்டுள்ளது. இறக்குமதி செய்வதற்கு நிகராக, குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியது

கிடைக்கும் கொள்வனவு கட்டளைக்கு ஏற்ப இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கும் இது பற்றிய அறிவை தேவையானவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும், இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு தயாராக உள்ளது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கே.பி.ஏகொடவெல மற்றும் பிரகேடியர் சுதத் உதயசேன ஆகியோர்,  கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − 49 =

Back to top button
error: