
இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘கொழும்பு துறைமுக நகர வளாகம்’ நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக பூங்கா மற்றும் கரையோரப் பகுதி மக்களுக்காக திறக்கப்படும்
இதேவேளை துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம மேலும் கூறினார்.