crossorigin="anonymous">
வெளிநாடு

சீனா அணு ஆயுத குவிப்பு, அமெரிக்கா கவலை

சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்..

“சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன” என்று அவர் கூறினார்.

சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட்  இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்காவின் எதிர்வினை வந்திருக்கிறது.

“இது போன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது” என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 − = 61

Back to top button
error: