crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இதுவரை மொத்தம் 2,51,750 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி

இலங்கையில் நேற்று காலை (27) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,825 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் ஆவர். ஏனைய 1,801 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 407 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 346 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 183 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 865 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று காலை (27) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 2,51,750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 145,447 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

நேற்று காலை 06.00 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2,172 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர்.

ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 71 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,734 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 20 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 1184 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்

ஜூன் மாதம் (25) இலங்கைக்குள் 43 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 18 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவர். நேற்று (27) காலை வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 09 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 356 கிராம சேவையாளர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (27) காலை நாடளாவிய ரீதியில் 61 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − = 15

Back to top button
error: