crossorigin="anonymous">
ஆக்கங்கள்

கண்டி நகரில் தலை நிமிர்த்தி நிற்கும் முஸ்லிம் இளைஞனின் அடையாளம்

உலக மரபுரிமை நகரின் அடையாளங்களில் ஒன்றாக கண்டி மணிக்கூட்டு கோபுரம்

இன்று கண்டியின் நில அடையாளங்களில் ஒன்றுதான் mahanuwara orulosu kanuwa(kandy clock Tower ) என அழைக்கப்படும் கண்டி மணிக்கூட்டு கோபுரம் ஆகும். இந்த கோபுரம் உலக மரபுரிமை நகரின் அடையாளங்களில் ஒன்றாக பாதுகாக்க படுகின்ற அதேவேளை இதன் பின்னால் ஒரு முஸ்லிம் இளைஜனின் சோகம் மிக்க வரலாற்று சம்பவத்தையும் கொண்டுள்ளது.

#பின்னணி
சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையில் கார் வியாபாரத்தில் மிகவும் பிரபலமானவர்தான் இஸ்மாயில் ஹாஜி அவர்கள் பிரித்தானியாவின் Rowlands limited இன் இலங்கை முகவராக இருந்து வாகன இறக்குமதியில் முன்னணியாக இருந்தவர். கண்டியில் உள்ள முஸ்லீம் ஹோட்டல் உள்ள இஸ்மாயில் கட்டிடமும். இன்னும் பல பெறுமதியான சொத்துக்களும் இவர்களுக்கே சொந்தமானது.

#வரலாறு.
இஸ்மாயில் ஹாஜி அவர்களின் மகனான சக்கீ இஸ்மாயில் கொழும்பு யில் இருந்து கண்டி நோக்கி வரும்வழியில் கடுகண்ணாவ எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 1947ஆகஸ்ட் 14ம் திகதி உயிர் இழந்தார். மகனின் இழப்பினால் குடும்பம் மட்டும் அல்ல முழு கண்டி நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

 

தனது மகனின் இழப்பின் நினைவாக பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் எதாவது செய்ய வேண்டும் என விரும்பிய இஸ்மாயில் குடும்பத்தினர் அன்றய கண்டி நகரின் முக்கிய தேவையாக இருந்த மணிக்கூட்டு கோபுரத்தை கட்டிக்கொடுக்க முன்வந்தனர்.

#கட்டுமான_பணிகள்.
மணிக்கூட்டு கோபுரம் கட்டும் பணிகளை தனது அன்பு மகன் இறந்து மூன்றாவது வருட நினைவு தினத்திலேயே 1950ஆகஸ்ட் 14ல் ஆரம்பித்து 1950டிசம்பர் 23ம் திகதி கட்டிடம் பூரணமாக முடிக்கப்பட்டது.

கட்டிடத்துக்கான வரைபுகளை இலங்கையின் மிக முன்னணி கட்டிட வரைஞ ராக இருந்து இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகம் போன்றவற்றின் கட்டிட முன்னோடி செர்லி டீ அல்விஸ் (Shirly de Alwis )அவர்கள் செயற்பட் டார். கட்டுமான இயந்திரங்கள் பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன

#திறப்பு_விழா.
கட்டி முடிக்கப்படட மணிக்கூட்டு கோபுரம் 1951ம் ஆண்டு அக்கால பிரதம மந்திரி டீ. ஸ் சேனநாயக்க (DS. Senanayake) மற்றும் கண்டி மேயர் ஈ .எல். சேனநாயக்க (EL Senanayake) போன்றோரால் திறந்து வைக்கப்பட்டது.

#படிப்பினை.
ஒரு முஸ்லீம் வர்த்தகர் தனது மகனின் இறப்பின் நினைவாக அவர் மரணித்த நினைவு தினத்தில் ஆரம்பித்து “சக்கி இஸ்மாயில் ” அவர்களின் பெயரில் சமர்ப்பணம் செய்த ஒரு கட்டிடம் இன்று இலங்கை கண்டி நகரில் மட்டுமல்ல உலக மரபுரிமை சின்னமாகவும் மாறி உள்ளது. இன்னும் கண்டி மற்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து பெருமை அடைய உதவும் அடையாளமுமாக உள்ளது.

எனவேதான் உயிருள்ள போதும், இறந்தவர்களின் பெயரிலும் பொதுப் பணிகளுக்கு செய்யும் தான தர்மங்கள் எமக்கு என்றும் உதவிக்கொண்டே இருக்கும் என்பதற்கு இது சிறந்த அடையாளமும் தக்க சாட்சியுமாகும்.

“இன மத பேதமின்றி பொதுப் பணிக்கு உதவுவோம். பெயர் நிலைத்து வாழ்வோம்.”
முபிஸால் அபூபக்கர்

சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை .
பேராதனிய பல்கலைக்கழகம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 + = 75

Back to top button
error: