crossorigin="anonymous">
பிராந்தியம்

நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சீருடை அறிமுகம்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் நேற்று (20) நடைபெற்றது.

புதிய சீருடை அறிமுக நிகழ்வின்போது, பிரதேச செயலாளர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பிரதேச செயலாளர் தனது உரையில், அலுவலக கடமைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு அரச சேவையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய சேவைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். அலுவலக உத்தியோகத்தர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார்.

பொதுமக்கள் தினத்தில் அலுவலகத்தில் அனைவரும் இன்று அறிமுகமாகி இருக்கும் இந்த சீருடையை தொடர்ச்சியாக அணிந்து வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், கணக்காளர் கே.எம்.றிஸ்வியஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எஸ்.சிவம், கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் இந்திரஜித், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் உட்பட திணைக்களங்களின் கீழ் பணியாற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 79 = 80

Back to top button
error: