crossorigin="anonymous">
ஆக்கங்கள்

எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய ‘விநோதக் கனவு’ நூல் அறிமுக விழா

இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார் ஏற்பாட்டில் செல்வன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய ‘விநோதக் கனவு’ நூலின் அறிமுக விழா சனிக்கிழமை (11) இல. 63, தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் நிகழ்ந்தது .

இந்நூல் அறிமுக விழாவினை பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் டாக்டர். எம்.ஏ.எம். முனீர் பெற்றுக்கொண்டார்

நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் கெளரவ மனோ கணேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பதிதிகளாக தமிழன் பத்திரிக்கை பிரதம ஆசிரியர் சிவராஜா ராமசாமி , விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம். பி. எம. பைருஸ் . கெப்பிட்டல் எப் .எம் பணிப்பாளர் ஸியா உல் ஹசன், பரணிதரன், முஸ்லிம் நிகழ்ச்சி உதவிப் பணிப்பாளர் பாத்திமா ரினூசியா, சமீஹா ஸபீர் மற்றும் பல ஊடகவியலாளர்கள் கவிஞர்கள் சமூக சேவகர்கள் என்று பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 56

Back to top button
error: