crossorigin="anonymous">
பிராந்தியம்

வவுனியாவில் பின்தங்கிய குடும்பங்களுக்கு சீனாவிடமிருந்து உலர் உணவு பொதிகள்

Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய மக்கள் 500 பேருக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சீனாவின் பௌத்த சங்கத்தின் பங்கேற்புடன் அந்நாட்டின் பௌத்த விகாரைகள் மற்றும் மக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட நிதியில் உலர்உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (05) இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான சீனத்தூதுவர் திரு. H. E. Qi zhenhong, அவரது பாரியார் திருமதி. Jin Qian, சீனா தூதரக அதிகாரிகள், இலங்கை – சீனா பௌத்த நட்புறவு சங்க உறுப்பினர்கள், மேலதிக மாவட்ட செயலாளர் ரி.திரேஸ்குமார், உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், பயனாளிகள் என பலரும் பங்கேற்று சிறப்பித்திருந்தனார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: