crossorigin="anonymous">
பிராந்தியம்

கிளிநொச்சியில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் அங்குரார்ப்பணம்

நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவில் கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் நேற்று (21) சனிக்கிழமை நடைபெற்றது.

தொடர்ந்து தேசிய ஜனசபை செயலாளரின் உரை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் வாழ்த்துச் செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சி அவர்களின் ஜனசபை முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன.

தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் உரை இடம்பெற்றது. தொடர்ந்து கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவிற்கான 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து செயற்குழுவின் முன்மொழிவு வேலைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.ஜனசபை முறை என்பது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எத்தகைய அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பு இடம்பெற வேண்டுமென வழங்கும் ஒரு முறையியல் ஆகும்.

ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் கீழ், பங்குபற்றல் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 27 முன்மாதிரி ஜனசபைகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், வடமாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ரவீந்திர டீ சில்வா, ஜனசபை செயலகத்தின் தகவல் உத்தியோகத்தர் S.M.ரசீன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 15 = 24

Back to top button
error: