crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“The Right Eye” புலனாய்வு நூல் வெளியீட்டு விழா

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (24) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்நூலின் முதற்பிரதியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.

23 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளராக மனுஷ நாணயக்கார ஆரம்பித்த தேடலின் பிரதிபலிப்பாக இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.

இந்நூலின் முதற்பிரதியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.

23 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளராக மனுஷ நாணயக்கார ஆரம்பித்த தேடலின் பிரதிபலிப்பாக இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை வலதுசாரி பகுப்பாய்வுடன் ஒரு புத்தகத்தில் படிக்க இதன் ஊடாக வாய்ப்புக் கிடைக்கிறது. மேலும் முழு தொழிலாளர் இயக்கம் மற்றும் எதிர்கால தொழிலாளர் சந்தை பற்றிய தெளிவான பார்வையையும் புத்தகம் முன்வைக்கிறது.

தொழிற்சங்கம் தொடர்பில் இதுவரையில் எழுதப்பட்டுள்ள நூல்கள் மற்றும் பிரசுரிப்புக்கள் என்பவற்றை ஆராய்ந்து தொழிலாளர் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடயங்களை இதனூடாக எடுத்துக்காட்ட முயன்றுள்ளமை தெளிவாகிறது.

இந்த நூலின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் வருமானத்தினை சில சிரம்படிய பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை கெபர் சமூக மக்களுக்காகவும் தொழிலாளர்களின் பிள்ளைகளது நலன்புரிதல் செயற்பாடுகளுக்காகவும் ஒதுக்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான, நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்‌ஷ, மஹிந்த அமரவீர, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, லசந்த அழகியவன்ன, அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜீர அபேவர்தன, வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க,

ஜனாதிபதியின் மக்கள் அலுவல்கள் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிற்சங்கப் பிரிதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 70 = 77

Back to top button
error: