மட்டக்களப்பில் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா பண்டிகை இன்று (27) புதன்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பம் செய்யப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற சமூகக்தினை உருவாக்குதல், கரையோர சுத்தம் பேணல், சுயதொழிலை முன்னேற்றல் ஆகிய சமூக நல இலக்குகளை நோக்காகக் கொண்டு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா பண்டிகை பெரு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் மாவட்டத்தின் பாரம்பரியங்களை வெளிக்கொணரும் கலை கலாச்சார நிகழ்வுகள், பாரம்பரிய உணவு வகைகள், மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள் பற்றிய வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றுலாப் பண்டிகை இடம் பெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் (28,29 ஆந் திகதிகளில்) மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையிலான கடற்கரை கால்பந்து சுற்றுப்போட்டிகளும் மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.