crossorigin="anonymous">
ஆக்கங்கள்

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று தடயங்கள் அழிவடைந்து செல்லும் நிலை

கண்டி மஹியாவை காட்டு பள்ளி இடம் கண்டி மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்டதாக ஆதாரம்

(முபிஸால் அபூபக்கர்)

இலங்கை முஸ்லீம்களின் வரலாற்று தொன்மையை எடுத்து நோக்கின் அதில் மததிய மாகாண கண்டி மாவட்ட முஸ்லீம்களின் பங்கு அதிகமாகும்.

முஸ்லீம் கல்வித் தந்தை அறிஞர் சித்தி லெப்பை உட்பட இந்த நாட்டின் பல முக்கிய பிரமுகர்களும் . அதேபோல சர்வதேச ரீதியாக முஸ்லீம் உலகுடன் இலங்கை முஸ்லிம்களை இணைத்து அடையாளப் படுத்திய ஒராபி பாஷா போன்றவர்களின் வாழ்விட அடையாளங்களும் 2ம் உலக மஹா யுத்தத்தில் இறந்த முஸ்லிம்கள் உட்பட பலரின் சமாதிகளும் கண்டியில் காணப்படுகின்றன.

அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் பிரபலமான பல முன்னோடிகளின் கப்ரு எனும் சமாதிகளைக் கொண்ட இடம்தான் கண்டி மஹியாவை காட்டு பள்ளியாகும். இந்த இடம் கண்டி மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்டதாக பல ஆதாரங்கள் உள்ளன. அதே போல் பல முக்கிய முஸ்லீம் அடயாளங்களையும் கொண்டு உள்ளது.

1). சித்திலெப்பை அவர்களின் மஹல்லாவான இப்பள்ளிவாசலில் அவருடைய கப்ர் உள்ளது
2) இலங்கை முஸ்லிம்களின் பெயர் சொல்லக்கூடிய பல இராணுவ தளபதிகளுடைய கப்ருகள் இங்கு உள்ளன
3) பிரபலமான குடும்ப பெயர்களைக் கொண்ட வைத்தியர்களின் கப்ருகள் காணப்படுகின்றன.
4). எகிப்த்தில் இருந்து ஒராபி பாஷா அவர்களுடன் இணைந்து வந்த பல அறிஞ ர்களின் கப்ருகளும் உள்ளன.
5) அதேபோல் கண்டி நகரின் பெயர் சொல்லக்கூடிய பல பணக்கார பிரபலங்களின் ஜனாஸாக்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன
6)மிகவும் முக்கியமான மீஸான் எனும் நடுகற்களை இங்குள்ள மையவாடி கொண்டுள்ளது.

ஆனால் இந்த முஸ்லீம் அடையாளங்களை பராமரிப்பதும் பாதுகாப்பதும் போதுமான அளவில் இங்கு இடம்பெற வில்லை. பல அடையாளங்கள் அழிவடைந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.

எனவே தான் இவற்றை பாதுகாக்க வேண்டியதும் அவை தொடர்பான ஆதாரங்களையும் ஆவணங்களையும் ஒன்று திரட்டி அவற்றை அடையாளப் படுத்தி அங்கு செல்பவர்கள் தெளிவாக விளங்கி கொள்ளும்படியான முறையிலும் குறிப்புக்களை பெறக்கூடிய வகையிலும் ஒரு ஆவண பகுதியை ஏற்பாடு செய்யவேண்டியது பள்ளிவாசல் நிர்வாகிகளின் கடமை மட்டுமல்ல .நலன் விரும்பிகள். இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லீம் சமய பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தின் கடமையுமாகும்.

உரியவர்கள் அவசரமாக கவனத்தில் கொண்டு எம் எதிர் கால சமுதாயம் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வழிவகை செய்வர்களா?

குறிப்பு :படத்தில் எனக்கு அருகில் இருப்பது சித்தி லெப்பை அவர்களின் கப்ரு ஆகும்.

முபிஸால் அபூபக்கர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை. பேராதனை பல்கலைக்கழகம்

பேராதனை பல்கலைக்கழகம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: